Saturday 5 November 2011

ம(தி)து மயக்கமென்ன ?...

                      மனிதன் சாதிக்கவேண்டும் என்பதற்கே பிறக்கிறான் ஆனால் பல பேர்களின் கால்கள் பாதைமாரிய பயணத்தை மேற்கொள்வதால் அவனது பயணம் எதை நோக்கியோ போய்க்கொண்டிருக்கிறது ஒருவன் எதை நோக்கி பயணிக்கிறானோஅதைப்போலத்தான் அவனது வாழ்க்கையும் அமையும்  
முதலில் மனிதன் தன்னை மதிக்கவேண்டும் ,தன்செயலை மதிக்கவேண்டும்  
தன அறிவைமதிக்கவேண்டும் ஒவ்வருவரும் ,தான் தன்னை மதித்தால் உலகம் அவரை தானாய் மதிக்கும் யாரும் யாரையும் வழிநடத்த தேவையில்லை 
                 கல்லும் முள்ளும் நிறைந்த பாதையும்,பச்சை புள் மெத்தை விரித்தார் போன்ற பாதையும் கண்களில் காட்சிதந்தாள் நாம் ,நம் கால்கள் நம்மை அறியாமலே இரண்டாவது பாதையில் பயணிக்குமே  அப்படி இருக்கும்போது 
நல்லவை ,தீயவை என்று நமக்கு தெரிந்தபோதும் தீயவயை நாம் ஏன் நாடவேண்டும், அதைத்தேடி ஏன் ஓடவேண்டும்
                  இதைத்தான் நம் பெரியவர்கள் ,"நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகத்தான் ஆவாய்  "என்றும்  "தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் "
என்றுசொல்லிச் சென்றுள்ளார்கள் .அதனால்தான் நாம் எப்பவுமே ,நல்ல விசயங்களில் நம்மை ஈடுபடித்தி கொள்ளவேண்டும் அப்படிச்செய்தால் 
சந்தர்ப்பம் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதை மாற்றிக்கொள்ளலாம் அல்லது 
அதிலிருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ளலாம் .ஆனால் தீயசெயல்களில் 
சிக்கிக்கொண்டால் நம்மால் அதிலிருந்து மீளவும் முடியாது ,நம்மால் நல்ல 
வாழ்க்கை வாழவும் முடியாது   
                   இன்றைய இளைஞர்களை,நிரம்ப குடும்பதலைவர்களை வாட்டிக்கொண்டிருப்பது  மது மற்றும் போதை வஸ்துக்கள் இந்த போதை 
ஆரம்பத்தில் ஆனந்தத்தை அளித்து அவரது மதியைம்யக்கி இறுதியில் 
அவரது விதியையே நிர்ணயித்துவிடுகிறது  
                   போதைக்கு அடிமைப்பட்டவரின் மானத்தை,மரியாதையை வாங்கிக்கொள்கிறது. குடிக்கபணமில்லாது போனாலும் பிட்ச்சை எடுத்தாகிலும் 
குடித்தே ஆகவேண்டும் என்றநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தும் இடுப்பிலே 
வேட்டிஇல்லை என்பதையும் அறியாமல் வீதியில் விழுந்துகிடக்கசெய்கிறது 
வாகனங்கள் வருவதையும் அறியாமல் அதுமாடுகளைப்போல் அலைந்து 
திரியச்செயகிறது ,குடிக்க இடமில்லை என்றாலும் ஒரு சிறுநீர் களிப்பிடத்துக்குள் அமர்ந்து குடிக்கசெயகிறது ஒரு குவளை மதுவுக்காக தன்  
ஆண்மைக்கு அடையாளம் தந்த மனைவியைக்கூட மாற்றானுக்கு விட்டுக்குடுக்க செய்திருக்கிறது 

                       கருத்தில் கொண்டு கவனத்தில் வெல்வோம் !