Monday, 24 October 2011

சூர்யா  ஜீவா  அவர்கள்  நான்    சொல்ல  நினைத்து  சொல்லாமல் 
விடுபட்டுப்போன  கருத்துக்களை  என்னைவிட  ஒருபடி 
உயர்ந்த  நடையில்  அழகாக  சொல்லிருக்கிறார்கள்  அவருக்கும்  நண்பர்  சண்முகவேல்  அவர்களுக்கும்  என்  நன்றி 

Sunday, 23 October 2011

7ஆம் அறிவின் தீபாவளிதீப ஒளித்திருநாள் 
மெல்ல மருவி 
தீபாவளித் திருநாளாகிப் போனது 
மருவி வந்தாலும் 
சரியாகவே 
அருவி நின்றுள்ளது 
தீபம் +ஆவளி = தீபாவளி
(தீபங்களின் வரிசை )
தீபங்களை இறைவனாக 
கருதி வணங்குவதே 
தீபாவளி !

நரகாசூரனை வதம் செய்து 
கொன்றதால் 
வந்தது தீபாவளியாம் !

ஒருயிரைக் கொன்றதால் 
நமக்கொரு 
கொண்ட்டட்டமா ............?

தீபாவளி.........!

சிவகாசியில் 
பட்டாசுகள்  செய்யும்போது 
விபத்துக்களில் 
பறந்துபோகும் உயிர்களுக்காய் 
பாகும் ,இனிப்பும்  கொடுத்து  
நரகாசூரனின் இறந்த நாளைக் 
கொண்டாட முடியுமா -அந்த 
குடும்பங்களால்.......... ?

தீபாவளி(லி ).........!

ஆண்டுக்கொரு   நாள் 
கொண்ட்டட்டத்துக்கு 
தினம் ,தினம் 
வெடி விபத்தில் 
வெந்து மடிந்த 
பல குடும்பங்கள் 
திண்டாடி   த்திரிகின்றனர் 
அன்று 
ஏதோஒரு தினத்தை 
மக்கள் 
மகிழ்ச்சிக்காக கொண்டாடிய 
ஒருநாள் 
தீபாவளித்திருநாள் ........!
கையிலோ ,பையிலோ 
எதுவும் இல்லாது போனாலும் 
நில்லாது 
கொண்டாடியே தீரவேண்டும் 
என்ற 
சம்பிரதாய ,சாஸ்த்திரம் 
ஆகிப்போனது !

தீபாவளி(லி ).........!

சூராதிசூரன் நரகாசூரனைக்கொன்றதாக 
புராணப் புழுகு பரவி 
தீபாவளி ஆனது 
தேவையா செத்தவன் ஆத்மாவுக்கு 
இனிப்புத் தின்று வெடிவெடிக்கும் 
இதயமில்லாசந்தோசம்..... .?
நாம் யாரையும் கொல்லவேண்டாம்
அந்த என்னத்தை இறைவனிடமே 
கொடுத்து விடுவோம் 

தீபாவளி 

பட்டாடை நெயதுதரும் 
தொழிலாளியின் -
பிஞ்சுக்குழந்தைக்கு
ஒட்டாடை இல்லை ....!
வீதியில் திரியும் அந்த 
வறுமைச்சிருமிக்கு
இல்லையொரு சிற்றாடை ...!

பங்களாக்களின் முகப்புகளில் 
பட்டாசு வெளிச்சம் 
குதூகலத்தை கொடுக்க ...!
குடிசைகளின் முன்பு 
கும்மிருட்டின் ஆட்சி ....!
பணக்காரப்பட்டாசு வெடிப்பு 
இளக்காரமாய் மாறி
சாம்பலாக்குகிறது 
ஏழைக்குடிசைகளை...!!

தீபாவளி(லி ).........!

ஜவுளிக்கடைகளில் 
அலையென திரண்டு குவியும் 
மக்கள் வெள்ளம் 
ஆனால்
ஒருவர் கைகளில் 
ஒன்பது ஆடை 
ஒன்பது பேர்களின் கைகளில் 
ஒன்றுமில்லை 
ஆடையைப் பார்த்து 
ஆசைப்பட்டபோதிலும் 
விலையைப் பார்த்துவிட்டு 
விலகியோடி ,கடைக்குள்
சுற்றி,சுற்றி வருகின்றனர் 
பலர் !

தீபாவளி(லி ).........!

எத்தனை  மாமனார்கள் 
"தலைதீபாவளி "மாப்பிள்ளைக்கு 
ஒத்தப்புத்தாடை   
எடுக்கவும் வழியின்றி 
ஏக்கத்துடன் மருகுகிறார்கள்
மகளின் வாழ்க்கை 
மண்ணாகுமோ என்று 
மனதுள் நடுங்குகிறார்கள் 
சங்கடங்கள் பல இருந்தாலும் 
குடும்பத்தின் கொண்டாடத்திர்க்காக 
குடும்ப தலைவனாய் திண்டாடி திரிவதிலும்  
ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது 
  
இந்த பணக்காரத் தலைவர்கள் 
மட்டும் 
எந்தக்கவலையுமின்றி-மக்களுக்கு 
சம்பிரதாய வாழ்த்தை 
ஆண்டுதோறும் அறிக்கையாக 
அளந்து விடுவதை 
தொழிலாக  செய்து வருகிறார்கள் ...!

அமைதி பூங்காவென பெயர் பெற்ற
இந்திய தேசத்துக்குள்ளும் 
வெடிகுண்டு கலாசாரம் 
மெல்ல தலைநீட்டி -
பலரின் தலைதனை கொய்திருக்கிறது 

சிந்திப்பாய் நண்பா .................

வெடித்தது தீபாவளி வெடியா ?
      அல்லது தீவிரவாத வெடியா ?

என்ற வித்யாசம் இல்லாது போய்விடாமல் 
பட்டுகோட்டை சொன்னானே ....!

"சித்திரை பூப்போலே சிதறும் மத்தாப்பு 
   தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு"

என்பதற்கு ஏற்ப விஞ்ஞானமும் 
தந்துள்ளதாம் விபத்தில்லாத வெடி 

ஆடையை எரிக்காத வெடி 
மேனியை பொசுக்காத வெடி 
ஆஹா என்ன ஆனந்தம் 
அணுகுண்டு வெடியை அறவே அகற்றிவிடுவோம்
காதுகளை பிளக்கும் வெடி இல்லா 
தீபாவளி 

சத்தமில்லா  தீபாவளி 
சங்கடமில்லா தீபாவளி 

சிந்திப்பாய் நண்பா .................
பந்திப்பாய் விரித்து 
முந்திதவம் இருந்து 
முன்னூறு நாள் சுமந்த 
அன்னையையும் தந்தையும் 
உடன் அமர்த்தி 
இல்லம் முழுக்க 
தீபத்தின் ஒளியேற்றி 
 உள்ளத்தின் இருள்நீக்கி 
நாம் எல்லோரும் கொண்டாடுவோம் 

தீபாவளி ...............!தீபாவளி ...............!

  
Wednesday, 19 October 2011

தேறுதல்(election)

தேறுதல் வந்தால் மக்கள் வாழ்வில் 
மாறுதல் வருமா ?
ஆறுதலாவது வருமா ?
கேள்விக்குரிபோல் உழைப்பவர் 
வாழ்க்கை மலருமா ?
யாரரிவார்?

ஓட்டுக்கள் வாங்கியபின்பு  
பூட்டு போட்ட GATE கொண்ட -ஒரு
வீட்டுக்குள் அமர்ந்துகொள்வார்
வெற்றிபெற்ற வேட்பாளர் 

அடுத்ததேருதல் வரும்வரை 
மக்களை அடையாளம்தெரியாத 
வெற்றிபெற்றவேட்பாளர் !
கோடிகளில் புரண்டுமகிழும் 
வேட்ப்பாளர்
தெருக்கோடியில் நின்று தவிக்கும் 
ஏழைமக்கள் 

பட்டாடையுடுத்தி பகட்டோடு திரிபவர் 
நடுவில் 
வருஷத்தின் ஒருநாளாம் 
அத்திருனாளிலும் 
ஒத்தாடை இல்லாத மக்கள் 

உழைத்து பிழைத்து 
உயர்ந்து வாழ உறுதி கொள்ள விடாமல் 
இலவசத்துக்காக -மக்களை 
ஏங்கிநிற்கவைத்த 
தலைவர்கள்(வேட்பாளர்கள்) 

பக்கத்து வீட்டு சண்டையைகூட 
தேறுதல்  பிரச்சரமாய் பயன்படுத்திய பரிதாபம் 
தேறுதல் முடிந்தபின்பும் 
தங்களுக்குள் நிலவிய போட்டியை 
அடுத்த தெருதல்வரை 
தொடர்ந்துகொண்டு 
மக்களைநினைக்காததலைவர்கள் 

ஏக்கங்கள்   மட்டுமே மக்களின் 
தூக்கமாகிப்போகுமோ?
யாரறிவார்
தேறுதல் வந்ததனால் மருதல்வருமா ?

வரணும் !வரணும் !

ஆவலுடன் அண்ணாந்து நிற்பவர் 
நடுவே 

நானும் ஒருவன் 

Saturday, 15 October 2011

வருந்தும் முன் திரும்பலாம் [ திருந்தலாம் ]


               வருந்தும் முன் திரும்பலாம் [ திருந்தலாம் ]  

காலை பத்திர்க்கை ஒன்றை புரட்டியபோது ஒருசெய்தி மும்பை தாக்குதலில் பங்கு பெற்ற தீவிரவாதி கசாப்  தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி கோரிக்கை வைத்த மனுவின் சாராம்சம்தான் அது .தான்செய்ததவறு தன்னால் மட்டுமே நடந்ததில்லை பிறர் தூண்டுதலில்நடந்தது அதனால் தான்தவறேசெய்யாதவன்  என்று சொல்லி தன தண்டனையை ரத்துசெய்ய கோருகிறார் அவர் வைக்கும்வாதம்                                              

                                     தான் சிறுவயதில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனதாகவும் ,குடும்பத்தில் தந்தையோடு ஒத்துபோக முடியாமல் முரண்பட்டு 
வீட்டைவிட்டு வெளியேறி தீய சக்திகள் கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்ப்பட்டதால் அவர்கள் தமது மூளையை சலவை செய்து தவறிழைக்க தூண்டிவிட்டதால்தான்  தாம் அந்த தவறை செய்ததாகவும்,தானாக செய்யவில்லை  எனவே தமது தண்டனையை றது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் வேடிக்கையாக இருகின்றது ...இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவருக்கு சிறைச்சாலையில் இவரது பாதுகாப்பு மற்றும் உணவு போன்றவற்றிகாக நாள் ஒன்றிற்கு கோடிக்கனக்கில் செலவிடபடுவதாக தகவல் அறியபடுகிறது  ..........
இவர் ஒரு  குற்றவாளிதான் என்பதற்கான ஆதாரத்தை அவரே அடையாளம் காட்டி விடுகிறார் ...............

                                     தந்தை சொல்லுக்கு கட்டுபடமுடியாமல் தந்தையுடன் முரண்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தீய சக்திகளோடு சகவாசம் வைத்துகொண்டதாக   கூறுகிறார் 

                                      குடும்பத்துக்கு அடங்காதவர் என்பதை அவரே      சுட்டி  காட்டிக்கொண்டார் .பின்னர் இறைவன் பெயரை சொல்லி தீயவர்கள் தமது மூளையை  சலவை செய்துவிட்டதாக கூறுகிறார்
                                    
                         " இறைவன் பெயரை சொல்லி அவர்கள் இவர் மூளையை 
                            சலவை செய்தார்களா ? - அல்லது  இவர் இறைவன் பெயரை                                
                            சொல்லி சட்டத்தின் மூளையை சலவை செய்ய பார்க்கிறாரா
                             யாருக்கு தெரியும் ? "


                                   இவரது கூற்றை சட்டம் எப்படி பார்க்க  போகிறது சட்டம் சம்பத பட்ட விஷயம் ஆவதால் அதற்குள் நாம் ஆழமாக நுழைய வேண்டாம்..................

                                    ஆனால் தாய் தந்தைக்கு அடங்காத பிள்ளை தறுதலை என்ன்ற பாடத்தை கசாப் நிரூபித்திருக்கிறார் ....அது அப்படி இறுக்க, நான் நடை பயிற்சி மேற்கொண்டு மைதானம் ஒன்றை வலம் வந்து கொண்டிருந்தபோது   வருத்தம் கலந்த குரல் ஒன்று காதில் விழுந்தது ......
                     
                                  "எங்க அப்பா அடிகடி  சொல்லுவாரு நான்தான் கேட்கல -என்ன  
                                   பன்றது "

                                  இப்படி அவர்  மட்டுமா சொல்கிறார் நம்மில் நிரம்பபேர் இப்படித்தான் சொல்லி கொண்டிருக்கிறோம்  

                                  "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை 
                                   தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை 
                                   ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை 
                                   அன்னை தந்தையே அன்பின் எல்லை "

                                  இப்படி எவ்வளவோ சொல்லப்பட்டிருந்தாலும்     நம் நெஞ்சுகளில் நிலைக்க வில்லை நினைவுகளில் நிற்க வில்லை நினைத்து பார்க்கவும் நேரமில்லை எதுவும் நம் கைகளில் இருக்கும்போது அதன் மதிப்பு நமக்கு தெரியவில்லை கைவிட்டு போனபின்புதான் அதனை எண்ணி தவிக்கிறோம் ......

                                 நம் தாயும் தந்தையும் இருக்க போவதோ சில நாள் அதில் இறக்க போவதோ ஒரு  நாள்  அந்நாளில் மட்டும் நாம் போய் அழுது நிற்பதில் அர்த்தமில்லை வருந்தி நிற்பதில் பயனில்லை அதனால் வருந்தும் முன் திரும்புவோமே (திருந்துவோமே) 
                           
                               நாமிருக்கும் வரை அவர்களை ஏகாந்தமாய் இன்ப படகில்              
                              அமர்த்தி.................... 
                               அவர்கள் இருக்கும் வரை நாம் இழுத்து செல்வோம் !
                                     

Tuesday, 11 October 2011

சிலேடை


வாழ்க்கை  என்பது  வாழ்ந்திடத்தான் -உலகின் 

வசந்தங்கள்  யாவும்  வாங்கிடத்தான் 

நேசம்கொண்டு   இருந்திடத்தான்-இனி

நேற்று  என்பதை  மறந்திடத்தான்   (வாழ்க்கையென்பது )


பாட்டுக்கள் யாவும் பாடிடத்தான் -மேடையோ 

பாவங்கள் கொண்டு ஆடிடத்தான் 

 நிலவும் வானில் காய்ந்திடத்தான் -அதில் 

 நீயும் நானும் சேர்ந்திடத்தான்          (வாழ்க்கையென்பது)


வாசல்தேடி வந்திடத்தான் -இந்த 

வாசம் என்பது முகர்ந்திடத்தான்

கன்னங்கள் இருப்பது முத்தாடத்தான் -உந்தன் 

கைகளினால் வந்து தொட்டாடத்தான்    (வாழ்க்கையென்பது )


இரவுகள் முழுக்க நீட்டித்திடத்தான் -என்னில் 

உறவு  கொண்டு இருந்திடத்தான் 

வரவுகள் கூட சேர்த்திடத்தான்-நல்ல 

செலவுகள் யாவும் செய்திடத்தான்          (வாழ்க்கையென்பது )

இப்பாடல் ஒரு ஆண் பாடினாலும் பொருள் கிடைக்கும்.

ஒரு பெண் பாடினாலும் இருபொருள் கிடைக்கும்.Thursday, 6 October 2011

அன்பே:
                 உன் விழிகள் விழைவிக்கும்

                 விபத்துகளுக்கு-
                  
                 உன்  மலரிதழ்களால் மட்டுமே

                 மருத்துவம் செய்ய முடியும்

குணா பக்கங்கள்: My arts

குணா பக்கங்கள்: My arts

My arts