Thursday 25 December 2014

27 ஆம் ஆண்டின் நினைவு அஞ்சலி

                              27 ஆம்  ஆண்டின்  நினைவு  அஞ்சலி 

                எம் .ஜி .ஆர் - ன்  நீங்காத  நினைவுகள் 





ஒவ்வொரு  ஆண்டும் 
ஜனவரி  பதினேழாம்  நாள் 
உன்னக்கு  பிறந்த  நாள் 
என்பதால் . அந்த  நாள்  
மனித  நேயத்துக்கே  
உகந்த  நாளாம் !
உன்னை 
நினைத்தால் போதும்  
உடலில் 
தானாய் உரம்  வந்து  ஏறும் !
இராமலிங்க அடிகளுக்கு 
மாணிக்கவாசகம்
உவட்டாமல் இனித்ததுவாம்  
எங்களுக்கு 
உன் திருமுகமும்  சேர்ந்து  
திகட்டாமல் இனிக்கிறதே !
உன் உடலே  
ஒரு 
கலைவடிவம் !
நீ...பிரம்மன் என்னும்  
சிற்பி செதுக்கி வைத்த 
சிலைவடிவம் !!
உண்கண்களிரண்டிலும்  
வடலூர் வள்ளலாரின் 
கருணை 
வழிந்து கொண்டிருக்கிறது !
உன் 
புருவம் இரண்டும்
ஸ்ரீ ராமனின்  கைவில்லுக்கே 
கணை தொடுத்துக் கொடுக்கிறது !

ஆள் பாதி ,ஆடை பாதி என்பார்கள் .
எல்லோருக்கும் ,அவர்கள் உடுத்தும் உடையால் அழகு
உனக்குமட்டும்தான் 
உன் உடலால் 
நீ...உடுத்தும் உடைகளுக்கே ஒரு அழகு !

நீ...நடந்தால்  ராஜநடை !
நீ...சிரித்தாள் ராஜகலை !!
முந்தைய பிறவிகளில் ..நீ 
இந்த 
மண்ணை ஆண்ட மன்னர்களில்  
ஒருவனாய் 
இருந்திருக்க வேண்டும் .அதுவும் 
நரசிம்மபல்லவனாய் 
நடமிட்டுருக்க வேண்டும் .!
அதனால்தானோ ,1917ல் 
நீ...எடுத்த ஒரு பிறவி க்குள்ளே 
முப்பிறவி எடுத்து ...இந்த 
மண்ணுலக மனித மனங்களை 
ஆண்டிருந்தாய் !
தமிழ் மண்ணையும் ஆண்டு சென்றாய் !!
நீ...
பூவுலகை விட்டுப்போய் 
27,அன்டுகலாகிப் போனது 
இன்னும் 
எத்தனை ஆண்டுகளானாலும் 
எங்களது 
இ தய சிம்மாசனத்திலிருந்து 
ஒருபோதும் இறங்கப்போவதில்லை .!
உன்னை 
என்,தந்தை போற்றி மகிழ்ந்தார்! 
நானோ ,ரசித்துமகிழ்ந்தேன் !!
என் 
மகனோ -உன்னை ,மாமனிதனாக 
மதித்து மகிழ்கிறான் !!!
இன்னும் 
எத்தனை தலை முறை 
உன்னை வாழ்த்த போகிறதோ ..?
வாழ்த்துகிறோம் !
இது வரையில் 
எங்கள் இதய தெய்வமாக வீற்றிருந்த ,நீயோ ..
இப்பொழுது 
சென்னை,ஆவடியில் அமைந்துள்ள 
ஆலயத்து தெய்வமாகவும் 
ஆகிப்போயிருக்கிறாய் .!
இன்னும் 
எத்தனை தலை முறை 
உன்னை 
வணங்கப்போகிறதோ ..?
வணங்கி மகிழ்கிறோம் !

                                                                                                         M.G.R.GUNASELVAN
                                                                                                         SENGUNDRAM.
                                                                                                         CHENNAI-52