Saturday, 18 February 2012

நம்பினார் கெடுவதில்லை

ஒரு நாள் ஆலய தரிசனம் செய்துவர ஆசைப்பட்டு குடும்பத்துடன் திருத்தணி முருகன்கோவில் புறப்பட்டோம் அதிகாலை மூன்று மணியளவில் வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வடபழனியில் இருந்து கிளம்பினோம் திருத்தணி முருகனை தரிசனம் செய்துமுடித்து வெளியில் வந்தபோது காலை ஆறரை மணிதான் ஆகி இருந்த்தது
                                     கடைவீதியில் குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தபோது ஒரு பெண் அப்பொழுதே திருமணமான நிலையில் கழுத்தில் மங்களகரமான தாலியுடனும்,மலர்மாலயுடனும் வந்துகொண்டிருந்தாள் அவளுடன் யாரும் வரவில்லை அவளுக்கு முன்னால் ஒரு பெரியவர் நடந்துகொண்டிருந்தார்
                                     அப்பொழுதுதான் நான் அவளது முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன் அடடா என்ன அழகு ,மஞ்சள் நிறத்தழகி, மங்கள முகத்தழகி ஆனால் அவள் அழுதுகொண்டே சென்றால் !அவள் அவ்வாறு சென்றது என் மனத்தில் மிகுந்த வேதனையை உருவாக்கியது என் குழந்தைகளை அழைத்து அவளின் நிலைக்காக வருந்தி விட்டு, வாகனத்தில் ஏறி புறப்பட்டோம்.மலையில் இருந்து இறங்கும் இறக்கமான சாலையில் வந்துகொண்டிருந்த போது எங்கள் வாகனத்தை ஒரு இருசக்கர வாகனம் கடந்தது ,அதிலே அந்தப்பெண் அமர்ந்து அழுதுகொண்டே சென்றாள்!.நான் என் மனைவியிடம அவளப்பற்றி சொல்லிமுடுக்கும்முன்னே ;ஐயோ!நான் மட்டுமல்ல அனைவரும் அலறிவிட்டோம் அவள் ஓடும் வாகனத்திலிருந்து இறங்க முற்ப்பட்டு கீழே விழுந்தால் எங்கள் வாகனம் அவள்மீது மோதிவிட்டது என்றே நினைத்தோம் !இறைவன் அருளால் அது நடைபெறவில்லை .எல்லோரும்வாகனத்தை விட்டு இறங்கிஓடினோம் இருசக்கர வாகனத்தை ஓட்டியவரும் எங்களுடன் வந்து அந்த பெண்ணை தூக்கி ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தோம்
                                     அவள் தாய் ,தந்தை ஆகியவர்களுக்கு தெரியாமல் தனக்குப்பிடித்த ஒருவரை திருமணம் முடித்திருப்பார் என்று எண்ணியபடி முருகன் இடம் அவளுக்கு நல்ல அமைதியை தர வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம் அனால் மனம்முளுக்க அந்தப்பெண்ணின் நினைவுதான் .
                                       எதோ ஒரு கவலையுடன் வீடுதிரும்ப விரும்பாத என்மனைவி
திருப்பதிசென்றுவரலாம் என்று சொல்ல நான் திருப்பதிக்கு ஒருநாளில் சென்று வர இயலாது என்று வாதிட்டேன் என்றபோதிலும் மனைவியின்பிடிவாதத்தாலும் அவர் ஒரு பெருமாள் பக்தை என்பதாலும் முயற்ச்சித்துப்பார்ப்போம் என்று முடிவெடுத்து புறப்பட்டோம் .
                                          கோவிலை நெருங்கியபோது நுழைவுசீட்டு குடுக்கும்நேரம் முடிவடயப்போகிறது என்றுசொல்லி அவசர ,அவசரமாக ஓடினோம் அனால் எதிர்பார்த்தது போல் நுழைவுச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது இலவச தரிசன வரிசை மிகநீண்டு இருந்தது அதிலே சென்றால் சாமிதரிசனம் எப்படியும் இரண்டு நாளாகும் என்பதை உணர்ந்த நான் மனைவியிடம் கோவில் வெளிப்பகுதியில்இறைவனை நினைத்து  சுற்றிவிட்டு செல்லலாம் என்று சொன்னேன் என் மனைவியோ ,நீங்கள் எல்லாம் ஊருக்கு திரும்பி போங்கள் நானேத்தனைனாலானாலும் இருந்து பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்றார் !
அவர் விருப்பப்படி அவருடன் இருந்துவரவும் என்னால் முடியவில்லை அலுவலகப்பணி தலைக்குமேலிருக்கிறது,எடுத்துசொல்லியும் அவர் கேட்கவில்லை அவர் :பெருமாள் என் அப்பன் எனக்கு காட்சி தருவான் அவனைபக்காம நான் வருவதாயில்லை என்று நம்பிக்கையுடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை
                                           எதிரில் முக்கியச்தர்களுக்கான நுழைவுச் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஒரு நபருக்கு ரூபாய் முன்னூறு நாங்கள் பணம்கொடுக்க தயாராக இருந்தோம் ஆனால் அங்கே முக்கியஸ்தர்களாக இருக்க வேண்டும்
அல்லது முக்கியஸ்தர்களது சிபாருசு இருக்கவேண்டும் நாங்கள் வெளிமாநிலத்தில் போய் முக்கியஸ்தர்களின் சிபாரிசுக்கு எங்கே போறது என்று மனைவியிடம் சொன்னபோது அவர் மீண்டும் எனக்கு அப்பன் பெருமாள் காட்சி தருவான் அதற்க்கு ஏதாவது வழிசெய்வான் என்று மீண்டும் ,மீண்டும் உறுதியோடு சொல்லிக்கொண்டிருந்தார் .
                                           நான் என்ன செய்வது என்று குல்ம்பிக்கொண்டிருந்தபோது
யாரோ என் தோளைதொடுவது கண்டு திரும்பிப் பார்த்தேன் அங்கே ஒரு தெலுங்கர் அவர் என்ன பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார் அனால் அவரிடம் உள்ள ஒரு சீட்டைகான்பித்தார் அதில் ஆந்திரா மாநிலத்து எம்>எல்>ஏ ஒருவரது சிபாரிசுக்கடிதம் அதிலே பத்து நபர்களுக்கு அனுமதி இருந்தது அந்தசீட்டை வைத்திருக்கும் அந்த நபர்கள் மொத்தம் நான்குபேர்கள் மட்டுமே இருக்கிறார்கள் மீதம் ஆறு நபர்கள் வரலாம் நீங்கள் எத்தனைபேர்கள் இருக்கிறீர்கள் எங்களுடன் வருவதாய் இருந்தால் வரலாம் என்று சொன்னார் என்ன ஆச்சர்யம் !நாங்கள் ஆறுபேர்கள் இருந்தோம் நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனோம்
                                       எனக்கு என்னவோ இறைவன் நேரில் வந்து அழைத்துபோனதுபோல்தான் இருந்தது என்மனைவி நம்பிக்கையோடு சொன்ன வார்த்தைகள் அதற்கு ஏற்றாற்போல் எங்களுக்கு தேவையான ஆறு நுழைவுச் சீட்டுக்களுடன் ஒருவர் வந்து அழைத்தது
                                     : நம்பினார் கெடுவதில்லை
                                       நான்குமறை தீர்ப்பு :...........என்பதை எண்ணி  மகிழ்ந்தபடி தரிசனம் முடித்து  கீழிறங்கி அலமேலுமங்காபுரம்   ,காளகஸ்தி ஆகிய தெய்வ ஸ்தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு மிகமகிழ்ச்சியுடன் இரவு ஒன்பது மணியளவில் வீடுவந்து சேர்ந்தோம் .
                                     
                                                                 மகிழ்ச்சி !              

Thursday, 16 February 2012

மனம் எங்கே ? குணம் அங்கே!

                              2012 பிப்ரவரி மாதத்தில் சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலே நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது தமிழக வரலாற்றில் இதுவரையில் நடைபெறாத ஒன்று ஒன்பதாவது படிக்கும் மாணவன் தன ஆசிரியை யே
கத்தியால் குத்திக்கொலை செய்திருக்கிறான் .!
                              புத்தியை தீட்ட வேண்டிய இடத்தில் அவன் கத்தியை தீட்டிப்பார்த்திருக்கிறான் !கேள்விப்பட்ட செய்தியை என்னித்திகைக்குமுன்னே
மற்றொரு மாவட்டத்து பிளஸ் ஒன்மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து சென்னையிலே நடந்ததுபோல் நடத்திவிடுவோம் என்றுசொல்லி ஆசிரியரை
மிரட்டி இருக்கிறார்கள் அதுமட்டுமா அதேபோல் அதேகாலக்கட்டத்துக்குள் ஒரு
அறியாச்சிறுவன்தன தந்தையையேகொலைசெய்து எரித்துவிடுகிறான்
                              இதுபோன்ற சம்பவங்களால் நம் மாணவசமுதாயமும் நம்இளைய சமுதாயமும் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை என்னிப்பார்க்கமுடியவில்லை
                               இதற்க்கெல்லாம் காரணம் என்ன ?என்று கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் ஆராய்ந்து பேசுகிறார்கள் கல்வியாளர்கள் நடைமுறையில் இருக்கும் கல்விமுறைதான் காரணம் என்கிறார்கள் எந்த இடத்தில் குற்றம்பிறந்திருக்கிறது யார்குற்றவாளி ?என்றெல்லாம் பேசுகிறார்கள்
யார் குற்றவாளியாக இருந்தாலும் போனஉயிர் போனதுதான் ,அந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு இது ஆறாத துயர்தான் ,அந்த மாணவனின் குடும்பத்திற்கும் ,அவன் படித்த அந்த பள்ளிக்கும் இது தீராத பழிதான் !
                                 ஒவ்வொரு ஆசிரியரும் தன மாணாக்கனை பெரிய ஆளாக்கிப்பார்க்க வேண்டுமென்றே நினைக்கிறார்கள்
                                 : பள்ளி என்ற நிலங்களிலே கல்விதனை விதைக்கணும்          
                                   பிள்ளைகளை சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும் :
என்பதைப்போலே ஒவ்வருபிள்ளையையும் நல்லகதிராக வளர்த்தெடுக்கவே ஆசைப்படுகிறார்கள் ஆனால் நடுவே கலைகளும் வளர்ந்து விடுகிறது
                                  மாணவரை   பொருத்தமட்டில் முந்தயகாலத்தில் ஆசிரியர்களை  தெய்வமாகவே கருதுவார்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள் தங்களால் இயன்ற உணவுப்பொருள்களை அவர்களுக்கு வழங்கி ஆனந்தப்படுவதுண்டு மாணவர்களுக்கு ஆசிரியரைப்பற்றி மரியாதையை உருவாக்குவதற்காக
                                    :மாதா பிதா குருதெய்வம் அவர் மலரடி தினம்தினம்
                                      வணங்குதல் வேண்டும்:
என்று படத்தின் வழியாகவே போதித்துவந்தனர் இன்று  இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட இடைவெளி .!
                                       ஆசிரியரப்பொருத்தமட்டில் அவர்கள்தான் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பார்கள் ஆனால் இன்று அவ்வாறில்லை போதைக்கு அடிமையான ஒரு   சில ஆசிரியர் மாணவர்முன்னால் அசிங்கப்படுகிறார் !காம இச்சைக்கு
அடிமைப்பட்டு கல்வி கற்க வந்த பச்சைகுழந்தயைக்கூட பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துகிறார்
                                      இதைவிடுத்து சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் முந்தய காலக்கட்டத்தில் நாட்டின்மீது பற்றுக்கொண்டவர்களாகஇருந்தார்கள் அரசாங்கம் மக்கள் மீது மதிப்புக்கொண்டிருந்தது
                                    திரைப்படம் ,திரைப்படத்தயாரிப்பாளர்கள்,திரை அரங்கத்தாளர்கள் ஒரு அக்கறையுடன் செயல் பட்டார்கள் இளைய சமுதாயத்தை பதிக்காத அளவுக்கு படமெடுத்தார்கள்  திரை அரங்கத்தார் இளைய சமுதாயம் பாக்ககூடாத படமாக இருந்தால் அரங்கத்திற்குள் அவர்களை அனுமதிப்பதில்லை ஆனால் இன்று படுக்கை அறைக்காட்ச்சிகள் நிறைந்த படத்திற்கு கூட பத்துவயது பாலகனையும் அனுமதிக்கின்றார் அவருக்கு தேவைகாசுதான்
                                  அரசாங்கம் முன்பெல்லாம் மதுக்கடைகளை மது அருந்துபவர்களுக்கு மட்டுமே தெரிகின்ற வகையில் அமைத்திருக்கும் ஆனால் இப்போது நான்கடிகளுக்கு ஒரு கடையை திறந்து அரசாங்கம் நடத்தினால் போதும் என்று மக்களைப்பற்றி கவலைகொள்ளாது இருக்கிறது
                                    எதிர்கால சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியரும்
எதிர்காலத்தளிர்களும் முன்னும் பின்னுமாக ஒன்றாகவே குடித்து கும்மாளமிடுகின்றனர் இதுபோன்ற நிலைமைகள் நீடிக்கும் வரையில் அது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும்
                                    : நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பதை விடுத்து
                                      நாமென்ன செய்தோம் அதற்க்கு என நினைத்தால் நன்மை        
                                      நம க்கு:என  அனைவரும் மாறினால் மலரும் வாழ்க்கை !
Saturday, 4 February 2012

ஆள்வதா ? வாழ்வதா ?...!


  சமீபத்தில் வடகொரிய மன்னர் 2வது கிம்  ஜ்ஹோன்க்  இயற்க்கை எய்தினார் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் தொலைக்காட்சியிலே  அழுது புரண்ட மக்களை பார்த்த போது மனம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோனது  ஒரு நாட்டை ஆளும் மன்னன்மீது மக்களுக்கு இவ்வளவு மதிப்பா இவ்வளவு பாசமா ?என்று   நான் பிரமித்துப்போனேன் .
                   
      மன்னனென்றால் சாதரணமா ? இங்கே  தமிழ் மாநிலத்தை ஆண்ட அண்ணா இறந்தபோது இரண்டரைக்கோடி மக்கள் ஒன்றுதிரண்டு அழுது புரண்டு தங்களது சோகத்தை கொட்டித்தீர்த்தது அதேபோல் எம்.ஜி .ஆர் அவர்கள் இறந்தபோது லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திலே துவண்டுகிடந்தனர் இன்னும் அவர்கள் இதயத்தில் இருந்து இறக்கிவிடவில்லை இன்னும் இதய தெய்வமாக வணங்கி வருகிறார்கள் என்றுசொன்னால் எந்த அளவுக்கு அவர்கள் மக்கள் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெளிவாகும் .
                   
                    ஆளுவது பெரிதல்ல ,மக்களின் மனங்களில் வாழ்வதே பெரிது !
என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்        
                        
     வடகொரிய மன்னரும் இதுபோல் வாழ்ந்து வந்தவராய் இருந்திருப்பார் என்று என்மனமும் கலங்கி கண்ணீர் வடித்தது !.
                              
                        ஆனால் ஒருவாரம் கழித்து தென்கொரிய அரசு 2வது கிம் ஜ்ஹோன்க் மரணத்திற்காக மக்களை அழுவதற்கு கட்டாயப்படித்திருக்கிறது என்றும் ,யார் ,யார் சரியாக அழவில்லை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு ஆறுமாத காலம் ஒரு குறிப்பிட்ட முகாமில் உழைக்க வேண்டும் என்ற தண்டனையை வழங்க இருப்பதாக பத்திரிகை செய்தி வெளியானதை கண்டபோது நான் அதிர்ந்துபோனேன் வெட்கப்பட்டேன் 
    
                            இவர்கள் ஹிட்லரை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறதே!
ஆண்டுகள் பல அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பதை அறியவில்லையா !
                                 
        முடிசான்ற மன்னரானாலும் முடிவிலொரு பிடி சாம்பலாகிப்போவார் என்பதை அறியாதவர்களா?
                                 
         முல்லைக்கு தேரையே கொடுத்த மன்னர்களும் இருக்கிறார்கள் !
                                  
                          மக்களை அடக்கி ஆள்வதில் பயனொன்றும் இல்லை அவர்கள் மனங்களை மடக்கி தமக்குள்ள அடக்கிக்கொள்ளவேண்டும் அப்போதுதான் மக்களின் மனங்களில் மரணத்திற்குப் பின்னும் வாழமுடியும் 
                                  வாழ்ந்தால் வாழ்த்தும் தலைமுறை ! 
                                                                   
                                                                     வாழ்க !