Monday 20 February 2012

பழம்பெரும்நடிகை

          பழம்பெரும் திரைப்பட நடிகை எஸ் .என் லட்சுமி ௧௯.               இரவு இயற்க்கை எய்துவிட்டதாக செய்திகேட்டு சொல்ல முடியாத துயருக்குள் தள்ளப்பட்டேன் என் எழுத்துக்களை இங்கே படித்து கருத்துகூறுவதற்கோ ,அல்லது ஆறுதல் சொல்வதற்கோ ஆளில்லை
நண்பர்களது எழுத்துக்களை நான் படித்து கருத்து கூறுவதற்கு நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை  என்றபோது அவர்களும் கூறவில்லை என்பதில் வருந்திப்பயனில்லை!... இருந்தாலும் , இந்த எழுத்துக்களின்மூலம் என் கண்ணீரை காணிக்கையாக்கிடவேண்டும் என்பதற்கே எழுதுகிறேன். .
           விருதுநகர் மாவட்டத்தில் சென்னல்குடி என்ற கிராமத்தில் பிறந்த லட்சுமி தனது பிறந்த கிராமத்தின் பெயரின் முதல் எழுத்துக்களையே ,தனது பெயருக்கு முன்னால் இட்டு எஸ். என். லட்சுமி என்று பெயர் வைத்துக்கொண்டார்.
            குக்கிராமத்திலே ஒரு பெண்ணாக பிறந்திருந்தாலும் இளமைப்பருவத்திலேயே உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் நாலுபேருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டே வளர்ந்தார்````
              இளமைப்பருவம் அடந்தபோது துணிந்து தனது தமயனின் துணையோடு சென்னைவந்து ,த.கே சண்முகம் அவர்களது குழுவில் இணைந்து நாடகத்தில் நடித்து வந்த அவர் பின்னர் சகஸ்ரநாமம் அவர்களது நாடகத்தில் இணைந்து நடித்து வந்தார்
               நாடகங்களில் ஆண்கள்தான் பெண்வேடமிட்டு நடிப்பதுண்டு .ஆனால் எஸ்.என் .லட்சுமி அவர்கள் மேடைகளில் ஆண்வேடமிட்டு நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார் .பின்னர் ,திரைப்படங்களில் நடித்து பெரும் புகழும் பெற்றுள்ள அவர் தமிழ் திரைப்பட கதாநாயகர்லான எம் .ஜி .ஆர் ,சிவாஜி போன்ற புகழ்பெற்ற நடிகர்களுக்கெல்லாம் அம்மா வேடமிட்டு நடித்து வந்தார் .
                எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அம்மாவேடமிட்டு நடித்த திரைப்படங்களை பார்த்து ,பார்த்து ரசித்த நான் அவர்களது ரசிகனாகிப்போனேன்
                 சென்னைவந்து அரசுப்பணியில் இருந்தாலும் தலைமைசெயலக பணியாளர்கள் பலருடன் இணைந்து அஞ்சன் ஆர்ட்ஸ் அகடமி என்ற குழுவின் சார்பில் மேடை நாடகங்கள் நடத்தி வந்தோம் அப்போது எஸ்.என்.லட்சுமி அவர்கள் திரைப்படத்திலே மிகவும் பிரபலமாக இருந்தாலும் நாங்கள் சமுதாய சீர்திருத்த நாடகங்கள் நடத்திவருகிறோம் நீங்களும் எங்களுடன் இணைந்து நடித்தால் ,நாடகத்தின் கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடையும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கி எங்களுடன் மேடையிலும் நடித்து வந்தார்
                  முதல்நாள் வரதட்சணை கொடுமை சம்பந்தமான நாடகத்துக்கு ஒத்திகை அவர்வந்தவுடன் ஒரு சோகமான காட்சிக்குரிய வசனம் கொடுக்கப்பட்டது அதைவாங்கிப்பார்த்த அவர் வசனங்களை பேச ஆரம்பித்தபோது நானும் என்னைசுற்றியுள்ள கலைஞர்களும் கலங்கிப்போனோம்,பிரமித்துப்போனோம் .காரணம் அவர்கள் அங்கேநடித்ததுபோல் இல்லை ,அந்தகாட்சியில் வாழ்ந்ததுபோல் இருந்தது வசனம் பேச,பேச அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
ஏற்கனவே அவர்மீது பற்று இருந்த எனக்கு அவர் நடிப்பை பார்த்து பிரமிப்பும் பெரிய மரியாதையும் ஏற்பட்டது அவரை மனதில் பதிவுசெய்து கொண்டதால்தான் இன்று நானும் மேடைகளில் சோகமான காட்சிகளில் நடிக்கும் பொழுது என் கண்களில் கிளிசரின் இல்லாமல் கண்ணீர் தானாய் வரும்
                    அவரும் நானும் நிரம்பநாடகங்களில்நடித்து வந்தோம் அந்த சந்தர்ப்பங்களில் அவருக்கு என்னை மிகவும் பிடித்துப்போனது அதற்கு அவர் சொன்ன காரணம் நான் மிகவும் நன்றாக நடிப்பதுடன் தமிழ் உச்சரிப்பு மிகத்தெளிவாக உச்சரிப்பதாக அவர் பலரிடம் சொல்லி மகிழ்ந்ததை நானும் நேரில் கேட்டுருக்கிறேன் .
                    அவர் நினைத்ததுபோல் திரைத் துரையில் பெரிய ஆளாக வளர்ந்த அவர்கள் கடைசிவரையிலும் திருமணம் எதுவும் செய்துகொள்ளாமல் அவரைச்சுற்றியுள்ள சுற்றத்தார்களுக்கும் ,தனகுடும்பத்தார்களுக்குமாகவே வாழ்ந்துவிட்டர்கள் அதுமட்டுமல்லாமல் தான தர்மங்கள் ஏராளம் செய்துள்ள அவர்கள் தான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததாலோ என்னவோ ?
நிரம்ப பேர்களுக்கு திருமணம் செய்துகொள்ள உதவி இருக்கிறார்கள்
                   மேலும் நாட்டுப்பற்று ,மொழிப்பற்று ,மற்றும் இனப்பற்றும் நிறைந்தஅவர்கள் நான் அவர்கள் இனத்தை சேர்ந்தவன் என்ற காரணத்தால் மேலும் அதிகப்படியான அன்பை என்மீது செலுத்தி எனக்கும் ஒரு திருமணம் செய்து வைக்க அவர் விரும்பினார் ,ஆரம்பத்தில் மறுத்துவந் த நானும் என்குடும்பத்தாரும் பின்னர் அவர் விருப்பபடியே பெண் பார்க்கும் படலத்தை தொடர்ந்தபோது முதலில் அவரது அண்ணன் மகள் ஒருவரைப்பார்த்து அது சரியாக அமையவில்லை
                    பின்னர் அவரது அண்ணன்வீட்டுக்கு பக்கத்தில் (திருச்சியில் )ஒருபெண் இருப்பதாக அறிந்து ஏற்பாடு செய்தபோது என் தாயும் குடும்பத்தாரும் பென்பார்த்தபோது எஸ்.என் லட்சுமி அவர்கள் என்னையும் ,என் குடும்பத்தாரையும் பார்த்து பெண்ணைப்பற்றி ஒன்று சொன்னார்கள்
                       :நீங்கள் எதிர்பார்த்ததுபோல் இவள் நல்லபெண் மாப்பிள்ளை           குணத்துக்குஏற்றபெண் ,இவளுடன் ஒரு இருவது வருசங்கள் வழ்ந்தபிரகும்கூட ஏதாவது குறை சொன்னிங்கன்னா ,நான் பொறுப்பெடுத்து கொள்கிறேன்  என்று சொன்னார் .எங்களுக்கு திருமணம் ஆகி இருபத்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது  இப்பொழுது எங்களுக்கு மகனொருவரும்,மகள்வயித்து பேரன் ஒருவரும் இருக்கிறார்கள்
                           இப்பொழுதும் என் மனைவிமீது எந்த குறையும் எவராலும் சொல்ல முடியவில்லை (என் அம்மா உள்பட )
                          என் மனைவி அமைந்ததெல்லாம் எஸ்.என்.லட்சுமி அம்மா கொடுத்த வரம் ...............!
                           அவர் ஆத்மா அமைதி பெற இறைவனை நான்வேண்டுவதுமட்டும் எனக்குபோதாது என் நண்பர்களும் இதைபடிக்கும் அனைவரும் வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்
                                                                         நன்றி ...........!

No comments:

Post a Comment