Thursday, 16 February 2012

மனம் எங்கே ? குணம் அங்கே!

                              2012 பிப்ரவரி மாதத்தில் சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலே நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது தமிழக வரலாற்றில் இதுவரையில் நடைபெறாத ஒன்று ஒன்பதாவது படிக்கும் மாணவன் தன ஆசிரியை யே
கத்தியால் குத்திக்கொலை செய்திருக்கிறான் .!
                              புத்தியை தீட்ட வேண்டிய இடத்தில் அவன் கத்தியை தீட்டிப்பார்த்திருக்கிறான் !கேள்விப்பட்ட செய்தியை என்னித்திகைக்குமுன்னே
மற்றொரு மாவட்டத்து பிளஸ் ஒன்மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து சென்னையிலே நடந்ததுபோல் நடத்திவிடுவோம் என்றுசொல்லி ஆசிரியரை
மிரட்டி இருக்கிறார்கள் அதுமட்டுமா அதேபோல் அதேகாலக்கட்டத்துக்குள் ஒரு
அறியாச்சிறுவன்தன தந்தையையேகொலைசெய்து எரித்துவிடுகிறான்
                              இதுபோன்ற சம்பவங்களால் நம் மாணவசமுதாயமும் நம்இளைய சமுதாயமும் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை என்னிப்பார்க்கமுடியவில்லை
                               இதற்க்கெல்லாம் காரணம் என்ன ?என்று கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் ஆராய்ந்து பேசுகிறார்கள் கல்வியாளர்கள் நடைமுறையில் இருக்கும் கல்விமுறைதான் காரணம் என்கிறார்கள் எந்த இடத்தில் குற்றம்பிறந்திருக்கிறது யார்குற்றவாளி ?என்றெல்லாம் பேசுகிறார்கள்
யார் குற்றவாளியாக இருந்தாலும் போனஉயிர் போனதுதான் ,அந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு இது ஆறாத துயர்தான் ,அந்த மாணவனின் குடும்பத்திற்கும் ,அவன் படித்த அந்த பள்ளிக்கும் இது தீராத பழிதான் !
                                 ஒவ்வொரு ஆசிரியரும் தன மாணாக்கனை பெரிய ஆளாக்கிப்பார்க்க வேண்டுமென்றே நினைக்கிறார்கள்
                                 : பள்ளி என்ற நிலங்களிலே கல்விதனை விதைக்கணும்          
                                   பிள்ளைகளை சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும் :
என்பதைப்போலே ஒவ்வருபிள்ளையையும் நல்லகதிராக வளர்த்தெடுக்கவே ஆசைப்படுகிறார்கள் ஆனால் நடுவே கலைகளும் வளர்ந்து விடுகிறது
                                  மாணவரை   பொருத்தமட்டில் முந்தயகாலத்தில் ஆசிரியர்களை  தெய்வமாகவே கருதுவார்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள் தங்களால் இயன்ற உணவுப்பொருள்களை அவர்களுக்கு வழங்கி ஆனந்தப்படுவதுண்டு மாணவர்களுக்கு ஆசிரியரைப்பற்றி மரியாதையை உருவாக்குவதற்காக
                                    :மாதா பிதா குருதெய்வம் அவர் மலரடி தினம்தினம்
                                      வணங்குதல் வேண்டும்:
என்று படத்தின் வழியாகவே போதித்துவந்தனர் இன்று  இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட இடைவெளி .!
                                       ஆசிரியரப்பொருத்தமட்டில் அவர்கள்தான் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பார்கள் ஆனால் இன்று அவ்வாறில்லை போதைக்கு அடிமையான ஒரு   சில ஆசிரியர் மாணவர்முன்னால் அசிங்கப்படுகிறார் !காம இச்சைக்கு
அடிமைப்பட்டு கல்வி கற்க வந்த பச்சைகுழந்தயைக்கூட பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்துகிறார்
                                      இதைவிடுத்து சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் முந்தய காலக்கட்டத்தில் நாட்டின்மீது பற்றுக்கொண்டவர்களாகஇருந்தார்கள் அரசாங்கம் மக்கள் மீது மதிப்புக்கொண்டிருந்தது
                                    திரைப்படம் ,திரைப்படத்தயாரிப்பாளர்கள்,திரை அரங்கத்தாளர்கள் ஒரு அக்கறையுடன் செயல் பட்டார்கள் இளைய சமுதாயத்தை பதிக்காத அளவுக்கு படமெடுத்தார்கள்  திரை அரங்கத்தார் இளைய சமுதாயம் பாக்ககூடாத படமாக இருந்தால் அரங்கத்திற்குள் அவர்களை அனுமதிப்பதில்லை ஆனால் இன்று படுக்கை அறைக்காட்ச்சிகள் நிறைந்த படத்திற்கு கூட பத்துவயது பாலகனையும் அனுமதிக்கின்றார் அவருக்கு தேவைகாசுதான்
                                  அரசாங்கம் முன்பெல்லாம் மதுக்கடைகளை மது அருந்துபவர்களுக்கு மட்டுமே தெரிகின்ற வகையில் அமைத்திருக்கும் ஆனால் இப்போது நான்கடிகளுக்கு ஒரு கடையை திறந்து அரசாங்கம் நடத்தினால் போதும் என்று மக்களைப்பற்றி கவலைகொள்ளாது இருக்கிறது
                                    எதிர்கால சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியரும்
எதிர்காலத்தளிர்களும் முன்னும் பின்னுமாக ஒன்றாகவே குடித்து கும்மாளமிடுகின்றனர் இதுபோன்ற நிலைமைகள் நீடிக்கும் வரையில் அது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும்
                                    : நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பதை விடுத்து
                                      நாமென்ன செய்தோம் அதற்க்கு என நினைத்தால் நன்மை        
                                      நம க்கு:என  அனைவரும் மாறினால் மலரும் வாழ்க்கை !
No comments:

Post a Comment