தீப ஒளித்திருநாள்
மெல்ல மருவி
தீபாவளித் திருநாளாகிப் போனது
மருவி வந்தாலும்
சரியாகவே
அருவி நின்றுள்ளது
தீபம் +ஆவளி = தீபாவளி
(தீபங்களின் வரிசை )
தீபங்களை இறைவனாக
கருதி வணங்குவதே
தீபாவளி !
நரகாசூரனை வதம் செய்து
கொன்றதால்
வந்தது தீபாவளியாம் !
ஒருயிரைக் கொன்றதால்
நமக்கொரு
கொண்ட்டட்டமா ............?
தீபாவளி.........!
சிவகாசியில்
பட்டாசுகள் செய்யும்போது
விபத்துக்களில்
பறந்துபோகும் உயிர்களுக்காய்
பாகும் ,இனிப்பும் கொடுத்து
நரகாசூரனின் இறந்த நாளைக்
கொண்டாட முடியுமா -அந்த
குடும்பங்களால்.......... ?
தீபாவளி(லி ).........!
ஆண்டுக்கொரு நாள்
கொண்ட்டட்டத்துக்கு
தினம் ,தினம்
வெடி விபத்தில்
வெந்து மடிந்த
பல குடும்பங்கள்
திண்டாடி த்திரிகின்றனர்
அன்று
ஏதோஒரு தினத்தை
மக்கள்
மகிழ்ச்சிக்காக கொண்டாடிய
ஒருநாள்
தீபாவளித்திருநாள் ........!
கையிலோ ,பையிலோ
எதுவும் இல்லாது போனாலும்
நில்லாது
கொண்டாடியே தீரவேண்டும்
என்ற
சம்பிரதாய ,சாஸ்த்திரம்
ஆகிப்போனது !
தீபாவளி(லி ).........!
சூராதிசூரன் நரகாசூரனைக்கொன்றதாக
புராணப் புழுகு பரவி
தீபாவளி ஆனது
தேவையா செத்தவன் ஆத்மாவுக்கு
இனிப்புத் தின்று வெடிவெடிக்கும்
இதயமில்லாசந்தோசம்..... .?
நாம் யாரையும் கொல்லவேண்டாம்
அந்த என்னத்தை இறைவனிடமே
கொடுத்து விடுவோம்
தீபாவளி
பட்டாடை நெயதுதரும்
தொழிலாளியின் -
பிஞ்சுக்குழந்தைக்கு
ஒட்டாடை இல்லை ....!
வீதியில் திரியும் அந்த
வறுமைச்சிருமிக்கு
இல்லையொரு சிற்றாடை ...!
பங்களாக்களின் முகப்புகளில்
பட்டாசு வெளிச்சம்
குதூகலத்தை கொடுக்க ...!
குடிசைகளின் முன்பு
கும்மிருட்டின் ஆட்சி ....!
பணக்காரப்பட்டாசு வெடிப்பு
இளக்காரமாய் மாறி
சாம்பலாக்குகிறது
ஏழைக்குடிசைகளை...!!
தீபாவளி(லி ).........!
ஜவுளிக்கடைகளில்
அலையென திரண்டு குவியும்
மக்கள் வெள்ளம்
ஆனால்
ஒருவர் கைகளில்
ஒன்பது ஆடை
ஒன்பது பேர்களின் கைகளில்
ஒன்றுமில்லை
ஆடையைப் பார்த்து
ஆசைப்பட்டபோதிலும்
விலையைப் பார்த்துவிட்டு
விலகியோடி ,கடைக்குள்
சுற்றி,சுற்றி வருகின்றனர்
பலர் !
தீபாவளி(லி ).........!
எத்தனை மாமனார்கள்
"தலைதீபாவளி "மாப்பிள்ளைக்கு
ஒத்தப்புத்தாடை
எடுக்கவும் வழியின்றி
ஏக்கத்துடன் மருகுகிறார்கள்
மகளின் வாழ்க்கை
மண்ணாகுமோ என்று
மனதுள் நடுங்குகிறார்கள்
சங்கடங்கள் பல இருந்தாலும்
குடும்பத்தின் கொண்டாடத்திர்க்காக
குடும்ப தலைவனாய் திண்டாடி திரிவதிலும்
ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது
இந்த பணக்காரத் தலைவர்கள்
மட்டும்
எந்தக்கவலையுமின்றி-மக்களுக்கு
சம்பிரதாய வாழ்த்தை
ஆண்டுதோறும் அறிக்கையாக
அளந்து விடுவதை
தொழிலாக செய்து வருகிறார்கள் ...!
அமைதி பூங்காவென பெயர் பெற்ற
இந்திய தேசத்துக்குள்ளும்
வெடிகுண்டு கலாசாரம்
மெல்ல தலைநீட்டி -
பலரின் தலைதனை கொய்திருக்கிறது
சிந்திப்பாய் நண்பா .................
வெடித்தது தீபாவளி வெடியா ?
அல்லது தீவிரவாத வெடியா ?
என்ற வித்யாசம் இல்லாது போய்விடாமல்
பட்டுகோட்டை சொன்னானே ....!
"சித்திரை பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு"
என்பதற்கு ஏற்ப விஞ்ஞானமும்
தந்துள்ளதாம் விபத்தில்லாத வெடி
ஆடையை எரிக்காத வெடி
மேனியை பொசுக்காத வெடி
ஆஹா என்ன ஆனந்தம்
அணுகுண்டு வெடியை அறவே அகற்றிவிடுவோம்
காதுகளை பிளக்கும் வெடி இல்லா
தீபாவளி
சத்தமில்லா தீபாவளி
சங்கடமில்லா தீபாவளி
சிந்திப்பாய் நண்பா .................
பந்திப்பாய் விரித்து
முந்திதவம் இருந்து
முன்னூறு நாள் சுமந்த
அன்னையையும் தந்தையும்
உடன் அமர்த்தி
இல்லம் முழுக்க
தீபத்தின் ஒளியேற்றி
உள்ளத்தின் இருள்நீக்கி
நாம் எல்லோரும் கொண்டாடுவோம்
தீபாவளி ...............!தீபாவளி ...............!
3 comments:
மேசைக்கடியில் பதுங்கும்
நாய்களும்
பூனைகளும்..
உயிர் நடுக்கத்தில்
செல்லப் பிராணிகளும்..
ஊரெங்கும் வேட்டைக்காரர்களா?
மிரண்டு போய்
பறவை இனங்கள்..
அமைதியான தூக்கம்
கலைந்து அலறும்
பிஞ்சு உள்ளங்கள்...
காற்றில் கலக்கும்
கந்தக நெடி...
போர்களுக்கு மத்தியில்
வாழ்ந்தவர்களால்
அனுபவிக்க முடியுமா
பட்டாசுகளின் ஆரவாரத்தை?
எழுந்து அடங்கும் சந்தேகம்...
பலர் சந்தோஷங்களில்
தீப ஒளி என்றாலும்,
பலர் பயத்தினில்
இருண்டே தான் கிடக்கிறது
ஐப்பசி அமாவாசை...
சூர்ய ஜீவாவும் கவிதையில் அசத்தி விட்டார்.சமூக நோக்குள்ள நல்ல கவிதை.
சூர்யா ஜீவா அவர்கள் நான் சொல்ல நினைத்து சொல்லாமல்
விடுபட்டுப்போன கருத்துக்களை என்னைவிட ஒருபடி
உயர்ந்த நடையில் அழகாக சொல்லிருக்கிறார்கள் அவருக்கும் நண்பர் சண்முகவேல் அவர்களுக்கும் என் நன்றி
Post a Comment