Saturday 15 October 2011

வருந்தும் முன் திரும்பலாம் [ திருந்தலாம் ]


               வருந்தும் முன் திரும்பலாம் [ திருந்தலாம் ]  

காலை பத்திர்க்கை ஒன்றை புரட்டியபோது ஒருசெய்தி மும்பை தாக்குதலில் பங்கு பெற்ற தீவிரவாதி கசாப்  தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி கோரிக்கை வைத்த மனுவின் சாராம்சம்தான் அது .தான்செய்ததவறு தன்னால் மட்டுமே நடந்ததில்லை பிறர் தூண்டுதலில்நடந்தது அதனால் தான்தவறேசெய்யாதவன்  என்று சொல்லி தன தண்டனையை ரத்துசெய்ய கோருகிறார் அவர் வைக்கும்வாதம்                                              

                                     தான் சிறுவயதில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனதாகவும் ,குடும்பத்தில் தந்தையோடு ஒத்துபோக முடியாமல் முரண்பட்டு 
வீட்டைவிட்டு வெளியேறி தீய சக்திகள் கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்ப்பட்டதால் அவர்கள் தமது மூளையை சலவை செய்து தவறிழைக்க தூண்டிவிட்டதால்தான்  தாம் அந்த தவறை செய்ததாகவும்,தானாக செய்யவில்லை  எனவே தமது தண்டனையை றது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் வேடிக்கையாக இருகின்றது ...இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவருக்கு சிறைச்சாலையில் இவரது பாதுகாப்பு மற்றும் உணவு போன்றவற்றிகாக நாள் ஒன்றிற்கு கோடிக்கனக்கில் செலவிடபடுவதாக தகவல் அறியபடுகிறது  ..........
இவர் ஒரு  குற்றவாளிதான் என்பதற்கான ஆதாரத்தை அவரே அடையாளம் காட்டி விடுகிறார் ...............

                                     தந்தை சொல்லுக்கு கட்டுபடமுடியாமல் தந்தையுடன் முரண்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தீய சக்திகளோடு சகவாசம் வைத்துகொண்டதாக   கூறுகிறார் 

                                      குடும்பத்துக்கு அடங்காதவர் என்பதை அவரே      சுட்டி  காட்டிக்கொண்டார் .பின்னர் இறைவன் பெயரை சொல்லி தீயவர்கள் தமது மூளையை  சலவை செய்துவிட்டதாக கூறுகிறார்
                                    
                         " இறைவன் பெயரை சொல்லி அவர்கள் இவர் மூளையை 
                            சலவை செய்தார்களா ? - அல்லது  இவர் இறைவன் பெயரை                                
                            சொல்லி சட்டத்தின் மூளையை சலவை செய்ய பார்க்கிறாரா
                             யாருக்கு தெரியும் ? "


                                   இவரது கூற்றை சட்டம் எப்படி பார்க்க  போகிறது சட்டம் சம்பத பட்ட விஷயம் ஆவதால் அதற்குள் நாம் ஆழமாக நுழைய வேண்டாம்..................

                                    ஆனால் தாய் தந்தைக்கு அடங்காத பிள்ளை தறுதலை என்ன்ற பாடத்தை கசாப் நிரூபித்திருக்கிறார் ....அது அப்படி இறுக்க, நான் நடை பயிற்சி மேற்கொண்டு மைதானம் ஒன்றை வலம் வந்து கொண்டிருந்தபோது   வருத்தம் கலந்த குரல் ஒன்று காதில் விழுந்தது ......
                     
                                  "எங்க அப்பா அடிகடி  சொல்லுவாரு நான்தான் கேட்கல -என்ன  
                                   பன்றது "

                                  இப்படி அவர்  மட்டுமா சொல்கிறார் நம்மில் நிரம்பபேர் இப்படித்தான் சொல்லி கொண்டிருக்கிறோம்  

                                  "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை 
                                   தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை 
                                   ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை 
                                   அன்னை தந்தையே அன்பின் எல்லை "

                                  இப்படி எவ்வளவோ சொல்லப்பட்டிருந்தாலும்     நம் நெஞ்சுகளில் நிலைக்க வில்லை நினைவுகளில் நிற்க வில்லை நினைத்து பார்க்கவும் நேரமில்லை எதுவும் நம் கைகளில் இருக்கும்போது அதன் மதிப்பு நமக்கு தெரியவில்லை கைவிட்டு போனபின்புதான் அதனை எண்ணி தவிக்கிறோம் ......

                                 நம் தாயும் தந்தையும் இருக்க போவதோ சில நாள் அதில் இறக்க போவதோ ஒரு  நாள்  அந்நாளில் மட்டும் நாம் போய் அழுது நிற்பதில் அர்த்தமில்லை வருந்தி நிற்பதில் பயனில்லை அதனால் வருந்தும் முன் திரும்புவோமே (திருந்துவோமே) 
                           
                               நாமிருக்கும் வரை அவர்களை ஏகாந்தமாய் இன்ப படகில்              
                              அமர்த்தி.................... 
                               அவர்கள் இருக்கும் வரை நாம் இழுத்து செல்வோம் !
                                     

5 comments:

shanmugavel said...

கருத்தாழமிக்க பதிவு.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

முற்றிலும் உண்மையான வாக்கியங்கள். இருக்கையில் தவிக்கவிட்டு, போனபின் தவிப்பதில் என்னபயன். தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்கச் சொல்லவில்லை. மனம்கோனாது மனிதராய் நடுத்துதல் நலமே.

அழகிய கட்டுரை நண்பரே.

SURYAJEEVA said...

தானும் தந்தையாவோம் என்றும் தாய் ஆகுவோம் என்றும் மக்கள் நிலைக்கு வரும் பொழுது எல்லாம் சரியாகி இருக்கும்..

SURYAJEEVA said...

//இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவருக்கு சிறைச்சாலையில் இவரது பாதுகாப்பு மற்றும் உணவு போன்றவற்றிகாக நாள் ஒன்றிற்கு கோடிக்கனக்கில் செலவிடபடுவதாக தகவல் அறியபடுகிறது //
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை... சிறைச்சாலைகளே இருக்க கூடாது என்கிறீர்களா?

கூடல் குணா said...

சூர்யஜீவா ,\

தனிஒரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவை இல்லை என்ற திரைப்பாடலைப்போலே உலகில் சிறைச்சாலைகளே இல்லாது போனால் சந்தோசமே !
கசாப்ப்புக்கு ஒருநாளைக்கு பாதுகாப்பு உணவு போன்றவற்றிற்காக எட்டு கோடி செலவிடுவதாக தகவல் அதனால் தீர்ப்பின் முடிவு (சாதகமோ ,பாதகமோ )விரை ந்திருக்கவேனும் என்பதுவே
நன்றி !

Post a Comment