வாழ்க்கை என்பது வாழ்ந்திடத்தான் -உலகின்
வசந்தங்கள் யாவும் வாங்கிடத்தான்
நேசம்கொண்டு இருந்திடத்தான்-இனி
நேற்று என்பதை மறந்திடத்தான் (வாழ்க்கையென்பது )
பாட்டுக்கள் யாவும் பாடிடத்தான் -மேடையோ
பாவங்கள் கொண்டு ஆடிடத்தான்
நிலவும் வானில் காய்ந்திடத்தான் -அதில்
நீயும் நானும் சேர்ந்திடத்தான் (வாழ்க்கையென்பது)
வாசல்தேடி வந்திடத்தான் -இந்த
வாசம் என்பது முகர்ந்திடத்தான்
கன்னங்கள் இருப்பது முத்தாடத்தான் -உந்தன்
கைகளினால் வந்து தொட்டாடத்தான் (வாழ்க்கையென்பது )
இரவுகள் முழுக்க நீட்டித்திடத்தான் -என்னில்
உறவு கொண்டு இருந்திடத்தான்
வரவுகள் கூட சேர்த்திடத்தான்-நல்ல
செலவுகள் யாவும் செய்திடத்தான் (வாழ்க்கையென்பது )
இப்பாடல் ஒரு ஆண் பாடினாலும் பொருள் கிடைக்கும்.
ஒரு பெண் பாடினாலும் இருபொருள் கிடைக்கும்.
6 comments:
கூடல் குணா அண்ணருக்கு வணக்கம்! ஷண்முகவேல் அண்ணன் உங்களை அறிமுகப்படுத்தி வச்சிருக்காப்ல!
அதான் வந்தேன்! சிலேடைப் பாட்டு சூப்பர்! வாழ்த்துக்கள்!
அப்புறம் உங்க டெம்ப்ளேட் கொஞ்சம் சேஞ்ச் பண்ணிக்குங்க! திரட்டிகளில் ஜாயின் பண்ணிக்குங்க! நம்ம ஏரியாவுக்கு வந்து ஓட்டும் கமெண்டும் போடுங்க!
சரிங்க! மீண்டும் சந்திப்போம்! வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!
இப்பாடல் ஒரு ஆண் பாடினாலும் பொருள் கிடைக்கும்.
ஒரு பெண் பாடினாலும் இருபொருள் கிடைக்கும்.
பாராட்டுக்கள்.
இருபொருள்பட அழகிய பாடல் புனைந்திருக்கிறீர்கள்.
அழகாக இருக்கிறது.
அன்பு நண்பர் சண்முகவேல் அவர்களின் அறிமுகத்தால்
கிடைத்த நல்முத்து நீங்கள்.
வளர்க நின் படைப்புகள்.
கருத்துக்கள் இடுகையில் வரும் comment verification code ஐ எடுத்து விடுங்கள்
கருத்திடுவோருக்கு உபயோகமாக இருக்கும்.
இது தாழ்மையான வேண்டுகோள்.
நன்றி.
கவிதை அருமை. சண்முகவேல் அறிமுகம் பார்த்து வந்தேன். '(கவிதைப்) பதிவு என்பது படித்திடத்தான், பின்னூட்டப் பேட்டி என்பது பாராட்டிடத்தான்' என்று போட்டு விட்டேன் வாழ்த்துகள்.
கவிதை அருமை
நானும் சகோ சண்முகவேல் சொல்லி..........
ஹி...ஹி...ஹி...
டெம்ப்ளேட் கலர் கண்ண உறுத்துது... அத மட்டும் கொஞ்சம் மாத்திடுங்க ப்ளீஸ் :-)
Post a Comment